பெரியார் ஒருவர் கூறுவதாவது நான் ஒரு தடவை கடை வீதிக்கு சென்றபோது என்னுடைய கறுப்பு நிற ஹபஷி அடிமை பெண்ணையும் அழைத்துச் சென்றேன். அங்கு ஓர் இட்த்தில் அவளை உட்கார வைத்துவிட்டு திரும்பி வந்து அழைத்துச் செல்வதாக கூறிச் சென்றேன். நான் திரும்பி வந்து பார்த்த போது அங்கு அவளை காணவில்லை. எனக்கு கோபம் ஏற்பட்டு நான் வீட்டிற்கு வந்து பார்த்த போது அந்த அடிமை பெண் அங்கிருந்தாள்.அவள் என்னை பார்த்தவுடன் எஜமானரே கோபபடாதீர்கள். தாங்கள் என்னை அல்லஹ்வை மறந்திருக்க கூடியவர்கள் இருக்குமிடத்தில் விட்டுச் சென்றீர்கள். அவர்களின் மீது அல்லாஹ்வின் தண்டனை இறங்கி விடுமோ அல்லது பூமிக்குள் அழுத்தப்பட்டு விடுவார்களோ, நானும் அவர்களுடன் சேர்ந்து அத்தண்டனையில் அகப்பட்டுக் கொள்வேனோ என்பதை பயந்து அங்கிருந்து வந்துவிட்டேன்.